கொண்டாட்டத்தின் அடுத்த கட்டம் ..! வெற்றி வீரர்களை வாழ்த்தி, விருந்தளிக்கிறார் பிரதமர் மோடி!
டெல்லி : நடப்பாண்டில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா மாகாணத்தில் நடைபெற்று வந்த டி20 உலகக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்று 17 வருடங்கள் கனவை பூர்த்தி செய்து இந்திய மக்கள் அனைவரையும் சந்தோசத்தின் உச்சிக்கு கொண்டு சென்றனர்.
இந்நிலையில், நேற்று இந்திய அணி விமானம் மூலம் புறப்பட்டு இன்று காலை டெல்லி விமான நிலையத்துக்கு வந்தடைந்தனர். அங்கு வெற்றி வீரர்களை வரவேற்க இந்திய அணியின் ரசிகர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அங்கு இறங்கியவுடன் உலகக்கோப்பையை கையில் ஏந்தி கேப்டன் ரோஹித் சர்மா மிகுந்த சந்தோஷத்தில் குத்தாட்டம் போட்டார், அவருடன் மற்ற வீரர்கள் கொண்டாடினார்கள். அந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதனை தொடர்ந்து அங்கு ரசிகர்கள் மத்தியில் கேக் வெட்டி கொண்டாட்டத்தை தொடங்கி வைத்தார் ரோஹித் சர்மா. தற்போது, 11 மணி அளவில் நம் இந்திய வீரர்கள் பிரதமர் மோடியை சந்தித்தனர். இந்த மோடி நம் வெற்றி பெற்ற வீரர்களை வாழ்த்தி தற்போது விருந்தளித்து வருகிறார். அங்கிருந்து இந்திய அணி வீரர்கள் மும்பை விமான நிலையத்துக்கு புறப்பட்டு சென்று, மாலை 5 மணி அளவில் அங்கிருந்து திறந்த வெளி பேருந்தில் கையில் உலகக்கோப்பையை ஏந்தியபடி வான்கடே மைதானம் நோக்கி வெற்றி ஊர்வலம் பயணிப்பார்கள்.
இதனை தொடர்ந்து நம் இந்திய வீரர்களுக்கு மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் வைத்து பிரமாண்ட வரவேற்புடன் சிறப்பு பாராட்டு விழா நடைபெற உள்ளது. அங்கு இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா வெற்றி பெற்ற உலகக்கோப்பையை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளரான ஜெய்ஷாவிடம் கோப்பையை ஒப்படைக்கும் நிகழவும் நடைபெற இருக்கிறது.