மியான்மர், தாய்லாந்து நிலநடுக்கம் – பிரதமர் மோடி கவலை.!

மியான்மர், தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடு, உடைமைகளை இழந்தவர்களுக்கு இந்திய பிரதமர் மோடி மோடி ஆறுதல் கூறியுள்ளார்.

Modi Earthquake

டெல்லி : தாய்லாந்து, மியான்மரில் சக்தி வாய்ந்த லநடுக்கம் ஏற்பட்டுள்ளது, இது ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது.  மியான்மரை ஓட்டியுள்ள தாய்லாந்திலும் பல அடி உயர கட்டடங்கள் சரிந்துவிழுந்தன. அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் காரணமாக கட்டடங்கள் சேதமடைந்திருக்கலாம் என்றும், உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

இருப்பினும், இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த முழுமையான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. அதாவது, நிலநடுக்கம் காரணமாக இணையதளம் துண்டிக்கப்பட்டதால் பாதிப்பு குறித்த முழு விபரம் வெளிவருவதில் தாமதம் நீடிக்கிறது. சக்தி வாய்ந்த பூகம்பத்தை தொடர்ந்து தாய்லாந்து நாடு முழுவதும் விமான சேவை முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது. நிலைமையை சமாளிக்க தாய்லாந்து அரசு அவசர நிலையை அறிவித்துள்ளது.

தற்போது, மியான்மர், தாய்லாந்தில் ஏற்பட்ட பூகம்பம் குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அவர், இரு நாடுகளுக்கும் தேவையான உதவிகளையும் இந்தியா செய்யத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இரு நாட்டு வெளியுறவு அதிகாரிகளுடன் இந்திய அதிகாரிகளைத் தொடர்பில் இருக்கவும் அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக, மியான்மர் மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களுடன் தொடர்பில் இருக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சகத்தைக் கேட்டுக் கொண்டதாக தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்