தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட திருநெல்வேலி – சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரயில் சேவை உள்பட 9 வந்தே பாரத் ரயில் சேவைகளை நேற்று கொடி அசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.
இந்த நிகழ்வில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்கள் அனைவரும் அக்டோபர் 1ம் தேதி, பொது இடங்களில் ஒரு மணி நேரம் தூய்மைப் பணியை மேற்கொள்ள வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். தொடர்ந்து பேசுகையில், அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது, காந்தியடிகளுக்கு நாம் தூய்மை இயக்கத்தின் மூலம் அஞ்சலி செலுத்த வேண்டும்.
அக்டோபர் 1 ஆம் தேதி அதாவது ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தூய்மை பற்றிய ஒரு பெரிய நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், உங்கள் தெரு, அல்லது சுற்றுப்புறம் அல்லது பூங்கா, ஆறு, ஏரி அல்லது வேறு எந்த பொது இடத்திலும் நீங்கள் நேரம் ஒதுக்கி பணியில் ஈடுபடுமாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
காந்தி பிறந்தநாளை முன்னிட்டு ஏற்கனவே, ‘தூய்மை இந்தியா’ என்ற பெயரில் செப்டம்பர் 15 முதல் பிரம்மாண்ட தூய்மைப் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில், அக்டோபர் 1 காலை 10-11 மணி வரை, பொது மக்கள் அனைவரும் தூய்மைப் பணியில் ஈடுபட வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…