மாநிலங்களவையில் இருந்து ஓய்வுபெறும் காங்கிரஸ் எம்பி குலாம் நபி ஆசாத்துக்காக கண்கலங்கினார் பிரதமர் மோடி.
இன்று டெல்லி நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஓய்வு பெறும் எம்பிக்களுக்கான பிரிவு உபசார விழா நடைபெற்றது. இதில், காஷ்மீரை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்து வரும் அவரது பதவி காலம் நிறைவடைகிறது. இதுகுறித்து அவர்களை பாராட்டி பிரதமர் மோடி பேசுகையில், குலாம் நபி ஆசாத் அவரது கட்சிக்காக மட்டும் அல்லாமல், நாட்டிற்காகவும், இந்த அவைக்காகவும் அக்கறை கொண்டவர் என்று மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
அவரது இடத்திற்கு வரும் புதிய தலைவரால், குலாம் நபியின் பணியை நிரப்ப முடியாது என கண்கலங்கியவாரே பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும், நான் உங்களை ஓய்வு பெற விடமாட்டேன், தொடர்ந்து உங்கள் ஆலோசனையை எடுத்துக்கொள்வேன் என்றும் என் கதவுகள் எப்போதும் உங்களுக்காக திறந்திருக்கும் எனவும் பிரதமர் மோடி உரையில் தெரிவித்தார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தை அமைத்த பின்னர், 2014 ஜூன் மாதம், குலாம் நபி ஆசாத் மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார்.
2015-ஆம் ஆண்டு, ஜம்மு-காஷ்மீர் தொகுதியில் இருந்து மாநிலங்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த ஆண்டு குலாம் நபி ஆசாத்துக்கு “சிறந்த நாடாளுமன்ற விருது” வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…