பிரதமர் மோடி : மூன்று நாள் அரசு முறை பயணமாக தனி விமானம் மூலம் பிரதமர் மோடி, இன்று காலை ரஷ்யா புறப்பட்டார். அங்கு, புதின் உள்ளிட்டோரை சந்தித்த பின் ஆஸ்திரியாவுக்கும் செல்ல உள்ளார். இப்போது, ரஷ்யா சென்றடைந்த பிரதமர் மோடியை அந்நாட்டின் துணை பிரதமர் டெனிஸ் மாந்துரோவ் வரவேற்றார்.
விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அதிபர் புதினுடன் 22வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டை மோடி நடத்துகிறார். இதுவரை இந்தியாவிலும் ரஷ்யாவிலும் 21 ஆண்டு உச்சி மாநாடுகள் மாறி மாறி நடந்துள்ளன.
இந்த் உச்சிமாநாட்டின் போது, இந்தியா – ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. 3-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக மூன்று நாள் பயணம் குறித்து அவரது எக்ஸ் பதிவில், ரஷ்யா, ஆஸ்திரியா நாடுகளுடன் உறவுகளை ஆழப்படுத்த இப்பயணம் அருமையான வாய்ப்பாக இருக்கும் என்றும், இரு நாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரை சந்திப்பதை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…