2 நாள் அரசுமுறை பயணமாக எகிப்து சென்றடைந்தார் பிரதமர் மோடி.!
4 நாட்கள் அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு எகிப்து தலைநகர் கெய்ரோ சென்றடைந்தார் பிரதமர் மோடி.
பிரதமர் நரேந்திர மோடி எகிப்து நாட்டிற்கு 2 நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். அமெரிக்காவில் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்ட அவர் இன்று தனி விமானத்தில் எகிப்து சென்றடைந்தார்.
பிரதமர் மோடியை எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா எல் சிசி விமான நிலையத்திற்கே வந்து நேரில் வரவேற்றார். எகிப்து பிரதமருடன் வட்டமேஜை ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும், இந்த பயணத்தின் மூலம் இரு நாடுகளுக்கிடையே உள்ள உறவு மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Prime Minister Narendra Modi arrives in Cairo on his inaugural visit to Egypt, following the successful completion of his state visit to the United States.
Upon his arrival, he is warmly greeted by the Egyptian Prime Minister at Cairo.#PMModi #IndiaEgypt #BilateralRelations pic.twitter.com/NLzdyzwhro
— TBS News India ???? (@TBSNewsIndia) June 24, 2023
கடந்த ஜனவரி 2023-ல் இந்தியாவின் குடியரசு தின விழாவில் ‘தலைமை விருந்தினராக’ கலந்துகொண்ட எகிப்திய ஜனாதிபதி அப்தெல் ஃபத்தாஹ் எல்-சிசி அழைத்ததன் பேரில் பிரதமர் மோடி, எகிப்துக்கு பயணம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.