PM Modi : அக்னி- 5 சோதனை வெற்றி பெற்றதாக பிரதமர் மோடி அறிவிப்பு ..!
PM Modi : அக்னி- 5 எனும் ஏவுகணை கண்டம் விட்டு கண்டம் பாயும் எரிபொருள் ஏவுகணையாகும். இது இந்தியாவை தாண்டி 5,500 கிமீ தொலைவிற்கு அப்பாலுள்ள இலக்கையும் தாக்கக்கூடிய வல்லமை உடைய ஏவகணையாகும்.
Read More :- நாடு முழுவதும் CAA குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவிப்பு
இந்த அக்னி-5 ஏவுகணை ஆனது முழுவதுமாக உள்நாட்டிலே உருவாக்கப்பட்ட ஏவுகணையாகும். இது குறித்த சோதனையை வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளதாக தற்போது பிரதமர் மோடி அவர்கள், அக்னி -5 ஏவுகணை சோதனையில் ஈடுப்பட்ட அனைத்து விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்து தெரிவித்து அவரது X தளத்தில் பதிவிட்டு இருந்தார்.
Read More :- உ.பி.யில் பேருந்து தீ விபத்து – 5 பேர் உயிரிழப்பு.!
இதை பற்றி , ” மிஷன் திவ்யாஸ்திரா திட்டத்தில், MIRV தொழில்நுட்பத்துடன் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பல இலக்குகளை ஒரே நேரத்தில் தாக்கும் திறன் கொண்ட அக்னி-5 ஏவுகணையின் முதல் சோதனை வெற்றி அடைந்துள்ளது. இந்த சோதனையை வெற்றிகரமாக நடத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை விஞ்ஞானிகளை நினைத்து பெருமை கொள்கிறேன் “, என்று அவரது X தளத்தில் பதிவிட்டிருந்தார்.
Proud of our DRDO scientists for Mission Divyastra, the first flight test of indigenously developed Agni-5 missile with Multiple Independently Targetable Re-entry Vehicle (MIRV) technology.
— Narendra Modi (@narendramodi) March 11, 2024