நாடாளுமன்ற பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.. பிரதமர் மோடி அறிவுரை!
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பாதுகாப்பு அத்துமீறல் சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதாவது நேற்று நடாளுமன்ற மக்களவைக்குள் அத்துமீறி உள்ளே நுழைந்த சிலர் கோஷங்களை எழுப்பி, தங்கள் கைகளில் இருந்த புகை குப்பிகள் வீசினர்.
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தகவல் வெளியானது. இந்த பாதுகாப்பு மீறல் தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கடும் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக ஒரே நாளில் திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட 15 பேர் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
ஒரேநாளில் கனிமொழி உட்பட 15 எம்பிக்கள் சஸ்பெண்ட்… மக்களவையில் எதிர்க்கட்சிகள் போராட்டம்!
அதேவேளையில், நாடாளுமன்ற மக்களவையில் நேற்று நடந்த அத்துமீறல் சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரகலாத் ஜோஷி , அனுராக் தாகூர் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் உடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். இதில், நாடளுமன்ற பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும் இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். மேலும், பாதுகாப்பை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டும் என்றும் அத்துமீறல் சம்பவத்தால் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாட்டில் காரணங்களை கண்டறிய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.