இன்று செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களிடம் உரையாற்றும் பிரதமர் மோடி!

Default Image

பிரதமர் மோடி இன்று செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

சீக்கிய குரு தேக் பகதூரின் 400-வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்கலிடம் உரையாற்றுகிறார்.பிரதமர் மோடியின் உரை இன்று இரவு 9.15 மணியளவில் தொடங்கும் என ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.பிரதமரின் உரை சமூகங்களுக்கு இடையேயான அமைதி மற்றும் நல்லிணக்கம் குறித்து இருக்கும் என்று கூறப்படுகின்றது.

டெல்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகக் குழுவுடன் இணைந்து மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ள இவ்விழாவில் 400 சீக்கிய இசைக்கலைஞர்களின் நிகழ்ச்சிகள் நடைபெறும்.மேலும்,குரு தேக் பகதூர் வாழ்க்கையை சித்தரிக்கும் பிரமாண்ட நிகழ்ச்சியும் நடைபெறும்.இவ்விழாவைக் குறிக்கும் வகையில் நினைவு நாணயம் மற்றும் தபால் தலையையும் பிரதமர் மோடி வெளியிடவுள்ளார்.

முகலாய பேரரசர் ஔரங்கசீப்பின் உத்தரவின் பேரில் காஷ்மீரி பண்டிட்டுகளின் மத சுதந்திரத்தை ஆதரித்ததற்காக குரு தேக் பகதூர் தூக்கிலிடப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்