பிரதமர் மன்மோகன் சிங்.? காங்கிரஸ் தலைவர்களின் வாழ்த்துக்களை விமர்சித்த பாஜக.!

Default Image

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு வாழ்த்து தெரிவித்த ப.சிதம்பரம் மற்றும் சசிதரூர் கருத்துக்கு , பாஜக செய்தி தொடர்பாளர் ,  ‘ சில காரணங்களுக்காக டாக்டர் மன்மோகன் சிங்கை பாரத பிரதமராக ப.சிதம்பரமும், சசி தரூரும் உண்மையாகவே ஒருபோதும் கருத்தமாட்டார்கள்.’ என விமர்சித்துள்ளார். 

இங்கிலாந்து புதிய பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் பதவியேற்றுள்ளார். இவருக்கு இந்திய தலைவர்கள் பலரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்படஏராளமானோர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதே போல, காங்கிரஸ் முக்கிய தலைவர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் ரிஷி சுனகிற்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார். அதில், ‘ முதலில் கமலா ஹாரிஸ், இப்போது ரிஷி சுனக். அமெரிக்க, பிரிட்டன் மக்கள், தங்கள் நாட்டில் பெரும்பான்மை இல்லாதவர்களைக்கூட நாட்டின் உயர்ந்த பதவில் அமரவைக்கிறார்கள். இதனை இந்தியா கற்றுக்கொள்ள வேண்டும். பெரும்பான்மைவாதத்தை கடைபிடிப்பவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.’ என அந்த வாழ்த்து சூசகமாக பாஜகவை விமர்சித்து கருத்து தெரிவித்திருந்தார்.

அதேபோல காங்கிரஸ் எம்பி சசி தரூர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுகையில், ‘பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் வந்தால், பிரிட்டன் மக்கள் உலகிலேயே அரிதான செயலைச் செய்ததை புரிந்து கொள்ள வேண்டும். ரிஷி சுனக்கை இந்தியர்களாகிய நாம் கொண்டாட வேண்டும். பிரிட்டன் போல் இந்தியாவில் நடக்குமா.’ எனத் தெரிவித்திருந்தார்.

இந்த கருத்துக்களை விமர்சித்து பாஜக செய்தி தொடர்பாளர் ஷேசாத் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ பெரும்பான்மை , சிறுபான்மை எனும் பிரிவுகள் தகுதிகளாக இருக்க கூடாது. அந்த பதவிக்கேற்ற தகுதிகளே, தகுதியாக இருக்க வேண்டும். ‘ என பதிவிட்டுள்ளார்.

மேலும் , ‘ எதோ சில காரணங்களுக்காக டாக்டர் மன்மோகன் சிங்கை பாரத பிரதமராக ப.சிதம்பரமும், சசி தரூரும் உண்மையாகவே ஒருபோதும் கருத்தமாட்டார்கள் போல. மன்மோகன் சிங்,ஜாகிர் ஹூசைன், பக்ருதீன் அகமது, ஜியானி ஜெயில் சிங், அப்துல் கலாம் ஆகிய சிறுபான்மையினர் இந்தியாவின் உயரிய பதவிகளில் இருந்துள்ளனர். என் அவர் தாது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்