பிரதமர் கிசான்: விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.36000..!
பிரதமர் கிசான் மன்தன் யோஜனாவின் கீழ் விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் ரூ.36000 பெறலாம்.
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (பிஎம் கிசான்) மூலம் நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று தவணைகளாக தலா ரூ.2,000 என ரூ.6,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மத்திய அரசிடமிருந்து நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது.
இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் மற்றொரு திட்டத்திலும் மாதாந்திர ஓய்வூதியம் வாங்க முடியும். பிரதமர் கிசான் மன்தன் யோஜனாவின் கீழ் விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் ரூ.36000 பெறலாம்.
உங்களுக்கு ரூ.36000 எப்படி கிடைக்கும் என்று தெரியுமா..?
பிரதமர் கிசான் மந்தன் யோஜனாவின் கீழ், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் வழங்கும் திட்டம் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ், 60 வயதிற்குப் பிறகு, விவசாயிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.3000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அதாவது ஆண்டுக்கு ரூ.36000 வழங்கப்படும். இந்த ஓய்வூதியத் திட்டத்தை நாட்டின் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்குகிறது. நீங்கள் பிரதமர் கிசானைப் பயன்படுத்திக் கொள்கிறீர்கள் என்றால், இதற்கான கூடுதல் ஆவணங்களை நீங்கள் சமர்ப்பிக்க தேவையில்லை.
இந்த திட்டத்தை யார் பயன்படுத்திக் கொள்ள முடியும்:
- 18 முதல் 40 வயது வரையிலான எந்தவொரு விவசாயியும் கிசான் மந்தன் யோஜனா கீழ் பலனைப் பெறலாம்.
- இதற்காக, நீங்கள் அதிகபட்சமாக 2 ஹெக்டேர் வரை சாகுபடி செய்யக்கூடிய நிலம் இருக்க வேண்டும்.
- விவசாயியின் வயதைப் பொறுத்து குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 40 ஆண்டுகள் வரை ரூ .55 முதல் ரூ .200 வரை மாதாந்திர பிரீமியம் செலுத்த வேண்டும்.
- இந்த திட்டத்தில் 18 வயதில் சேர்ந்தால், ரூ. 55 , 30 வயதில் சேர்ந்தால் ரூ.110, 40 வயதில் சேர்ந்தால் ஒவ்வொரு மாதமும் ரூ .200 டெபாசிட் செய்ய வேண்டியிருக்கும்.
இதில் சேர நினைப்பவர்கள் maandhan.in என்ற இணைய முகவரியில் சென்று இணையலாம்.