சொந்த பணத்தில் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு ரூ.21 லட்சம் நன்கொடையாக கொடுத்த பிரதமர் !!!
- கும்பமேளா ஜனவரி 15-ந் தேதி தொடங்கியது.
- கும்பமேளா தொடங்கி நாளில் இருந்து இதுவரை சுமார் 25 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடி இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் கும்பமேளா ஜனவரி 15-ந் தேதி தொடங்கியது.முதல் நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் சாதுகள் புனித நீராடினர்கள்.
கும்பமேளாவை முன்னிட்டு ஆற்றில் 8 கிலோ மீட்டர் வரை 40-க்கும் மேற்பட்ட இடங்களில் புனித நீராட ஏற்பாடு செய்தனர்.
மேலும் பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து , மருத்துவம் , உணவு , தங்குமிடம் , குடிநீர் , கழிப்பறை ஆகிய பல்வேறு வசதிகளை மாநில அரசு செய்தது.இதற்காக மாநில அரசு சுமார் ரூ.4 ஆயிரத்து 200 கோடி செலவு செய்தது.
கும்பமேளாவில் புனித நீராடுவதற்காக நாடு முழுவதும் உள்ள ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து
மேலும் வெளிநாட்டை சேர்ந்தவர்களும் புனித நீராடினர்கள். கும்பமேளா தொடங்கி நாளில் இருந்து இதுவரை சுமார் 25 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடி இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் கும்பமேளா துப்புரவுத் தொழிலாளர்களின் வங்கிக் கணக்குக்கு ரூ.21 லட்சம் தொகையை நன்கொடையாக கொடுத்துள்ளார் பிரதமர் மோடி. தன்னுடைய சொந்த பணத்தை கொடுத்ததாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதற்க்கு முன் கடந்த பிப்ரவரி 25-ம் தேதி கும்பமேளா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி அங்கு வேலை பார்த்த ஏராளமான துப்புரவுத் தொழிலாளர்களுடன் பேசினார்.
இதைத் தொடர்ந்து துப்புரவுத் தொழிலாளர்கள் 5 பேரின் பாதங்களை பிரதமர் மோடி கழுவி அவர்களை கவுரவப்படுத்தினார்.
இதைத் தொடர்ந்து சிறந்த துப்புரவுத் தொழிலாளர்களுக்கு பிரதமர் விருது வழங்கி கவுரவப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
மேலும் மகா கும்பமேளா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறையும், கும்பமேளா 6 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் நடைபெறும்.