பிரதமர் நரேந்திர மோடி தனது அயோத்தி பயணத்தில் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் 15,700 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கும் பொது நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அயோத்தி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளின் வளர்ச்சிக்காக சுமார் ரூ.11,100 கோடி மதிப்பிலான திட்டங்களும், உத்தரப்பிரதேசம் முழுவதும் உள்ள மற்ற திட்டங்களுக்கு சுமார் ரூ.4600 கோடி மப்பிலான திட்டங்களும் இதில் அடங்கும்.
இதற்கிடையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மறுவடிவமைக்கப்பட்ட அயோத்தி ரயில் நிலையத்தை திறந்து வைத்தார். அதன்பின்னர் இரண்டு அமிர்த பாரத் மற்றும் ஆறு வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன்படி, ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா-புது டெல்லி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; அமிர்தசரஸ்-டெல்லி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; கோவை-பெங்களூரு கான்ட் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; மங்களூர்-மட்கான் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; ஜல்னா-மும்பை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் அயோத்தி கான்ட்-ஆனந்த் விஹார் டெர்மினஸ் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயங்கவுள்ளது.
இந்த 6 வந்தே பாரத் ரயில்களில் 2 ரயில்கள் தெற்கு ரயில்வேயில் இணைந்துள்ளது. அதன்படி கோவை-பெங்களூரு கான்ட் செல்லும் கோயம்புத்தூர் வந்தே பாரத், மங்களூர்-மட்கான் செல்லும் மங்களூர் வந்தே பாரத் என இரண்டு ரயில்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது. மங்களூர் சென்ட்ரல்-மட்கான் சந்திப்பு வந்தே பாரத் ரயில் (20646/20645) வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்படும். ரயில் எண் 20646 மங்களூரு சென்ட்ரல் காலை 08.30 மணிக்கு புறப்படும். ரயில் மதியம் 1.15 மணிக்கு சென்றடையும். பதிலுக்கு, ரயில் எண் 20645 மட்கான் சந்திப்பில் இருந்து மாலை 06.10 மணிக்குப் புறப்பட்டு இரவு 11.45 மணிக்கு மங்களூரு சென்ட்ரலை சென்றடையும். வழியில் இந்த ரயில் உடுப்பி மற்றும் கார்வார் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
தமிழ்நாட்டிலும் சென்னை – கோவை, சென்னை – பெங்களூர், சென்னை- நெல்லை உள்ளிட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தகக்து.
திருச்செந்தூர் : ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழ்நாட்டில் சனாதன தர்ம யாத்திரையை தொடங்கியுள்ளார். அதன்படி, தமிழகத்தில் நான்கு…
டெல்லி : மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வர் பிரேன் சிங் ராஜிநாமா செய்து 5…
சென்னை : தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வசம் உள்ள காதி, கிராம…
பாகிஸ்தான் : கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின்போது, ஐசிசி நடத்தை விதிகளின் நிலை…
சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் 'ரெட்ரோ' திரைப்படத்தின் முதல் பாடலான…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள்…