6 வந்தே பாரத் ரயில்கள் கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர்..!

பிரதமர் நரேந்திர மோடி தனது அயோத்தி பயணத்தில் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் 15,700 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கும் பொது நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அயோத்தி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளின் வளர்ச்சிக்காக சுமார் ரூ.11,100 கோடி மதிப்பிலான திட்டங்களும், உத்தரப்பிரதேசம் முழுவதும் உள்ள மற்ற திட்டங்களுக்கு சுமார் ரூ.4600 கோடி மப்பிலான திட்டங்களும் இதில் அடங்கும்.

இதற்கிடையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மறுவடிவமைக்கப்பட்ட அயோத்தி ரயில் நிலையத்தை திறந்து வைத்தார். அதன்பின்னர்   இரண்டு அமிர்த பாரத் மற்றும் ஆறு வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன்படி, ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா-புது டெல்லி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; அமிர்தசரஸ்-டெல்லி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; கோவை-பெங்களூரு கான்ட் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; மங்களூர்-மட்கான் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; ஜல்னா-மும்பை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் அயோத்தி கான்ட்-ஆனந்த் விஹார் டெர்மினஸ் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள்  இயங்கவுள்ளது.

இந்த 6 வந்தே பாரத் ரயில்களில் 2 ரயில்கள் தெற்கு ரயில்வேயில் இணைந்துள்ளது. அதன்படி கோவை-பெங்களூரு கான்ட் செல்லும் கோயம்புத்தூர் வந்தே பாரத், மங்களூர்-மட்கான் செல்லும் மங்களூர் வந்தே பாரத் என இரண்டு ரயில்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது. மங்களூர் சென்ட்ரல்-மட்கான் சந்திப்பு வந்தே பாரத் ரயில் (20646/20645) வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்படும். ரயில் எண் 20646 மங்களூரு சென்ட்ரல் காலை 08.30 மணிக்கு புறப்படும். ரயில் மதியம் 1.15 மணிக்கு சென்றடையும். பதிலுக்கு, ரயில் எண் 20645 மட்கான் சந்திப்பில் இருந்து மாலை 06.10 மணிக்குப் புறப்பட்டு இரவு 11.45 மணிக்கு மங்களூரு சென்ட்ரலை சென்றடையும். வழியில் இந்த ரயில் உடுப்பி மற்றும் கார்வார் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

தமிழ்நாட்டிலும் சென்னை – கோவை, சென்னை – பெங்களூர், சென்னை- நெல்லை உள்ளிட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தகக்து.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

appavu - pm modi
Sunita Williams health
tn rain
VCK Leader Thirumavalavan - TN BJP Protest against TASMAC
TN Assembly - Speaker Appavu
TN CM MK Stalin - BJP State president Annamalai