உலக பல்கலைகழக விளையாட்டில் பதக்கம் வென்றோருக்கு பிரதமர் வாழ்த்து..!

PMModi aiep

உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு, பதக்கம் வென்ற இந்திய வீர்ரகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

அந்த பதிவில், 31வது உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில், 26 பதக்கங்களை வென்று இந்திய விளையாட்டு வீரர்கள் சாதனை படைத்துள்ளனர். இதில் 11 தங்கம், 5 வெள்ளி மற்றும் 10 வெண்கலங்கள் அடங்கும். தேசத்திற்கு பெருமை சேர்த்த மற்றும் வரவிருக்கும் விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகம் அளித்த நமது அபாரமான விளையாட்டு வீரர்களுக்கு ஒரு சல்யூட். இந்த வெற்றிக்காக விளையாட்டு வீரர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் பயிற்சியாளர்களை நான் பாராட்டுகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்