ஆச்சார்யா வித்யாசாகர் மறைவையொட்டி பிரதமர் இரங்கல்..!
சத்தீஸ்கர் மாநிலம், டோங்கர்கரில் உள்ள சந்திரகிரி தீர்த்தத்தில் சனிக்கிழமை இரவு 2:35 மணிக்கு உயிரிழந்தார். இதற்கு சில தினங்களுக்கு முன், ஆச்சார்யா பதவியை ராஜினாமா செய்த அவர் கடந்த மூன்று நாட்கள் உண்ணாவிரதம் மற்றும் மவுனத்தை கடைபிடித்து வந்த நிலையில் உயிரிழந்தார். நாடு முழுவதிலும் இருந்து அவரது சீடர்கள் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக சந்திரகிரிக்கு வந்துள்ளனர். ஆச்சார்யா வித்யாசாகர் பிப்ரவரி 6 அன்று ஆச்சார்யா பதவியில் இருந்து ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது உயிரிழப்பு பின் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது சமூக வலைத்தளமான எக்ஸ் பதிவிட்ட பதிவில் “ஆச்சார்யா ஸ்ரீ 108 வித்யாசாகர் ஜி மகராஜின் மறைவு நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. மக்களிடையே ஆன்மீக எழுச்சிக்காக அவர் ஆற்றிய மதிப்புமிக்க முயற்சிகள் என்றென்றும் நினைவுகூரப்படும்.
அவரது ஆசிகளை நான் தொடர்ந்து பெறுவது எனது அதிர்ஷ்டம் என்று, கடந்த ஆண்டு சத்தீஸ்கரில் உள்ள சந்திரகிரி ஜெயின் கோயிலில் அவருடனான சந்திப்பு எனக்கு மறக்க முடியாததாக இருக்கும்.
அப்போது நான் ஆச்சார்யா ஜியிடம் நிறைய அன்பையும் ஆசிகளையும் பெற்றிருந்தேன். சமுதாயத்தில் அவர் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்பு நாட்டின் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும் என பிரதமர் மோடி கூறினார்.
आचार्य श्री 108 विद्यासागर जी महाराज जी का ब्रह्मलीन होना देश के लिए एक अपूरणीय क्षति है। लोगों में आध्यात्मिक जागृति के लिए उनके बहुमूल्य प्रयास सदैव स्मरण किए जाएंगे। वे जीवनपर्यंत गरीबी उन्मूलन के साथ-साथ समाज में स्वास्थ्य और शिक्षा को बढ़ावा देने में जुटे रहे। यह मेरा… pic.twitter.com/mvJJPbiiwM
— Narendra Modi (@narendramodi) February 18, 2024