பிரதமரே, விவாதங்களையும், கேள்விகளை தவிர்ப்பதும் தான் பாராளுமன்ற விவாதமுறைக்கு எதிரானது என ராகுல் காந்தி ட்வீட்.
டெல்லியில் நேற்று நாடாளுமன்ற கூட்ட தொடர் தொடங்கியது. இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, பாராளுமன்றத்தில் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், தேவைப்பட்டால் விவாதம் நடத்த வேண்டும். அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆழ்ந்து சிந்தித்து விவாதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆக்கபூர்வமாக அமைய வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 80.எரிவாயு 1000க்கு மேல். ஜூன் மாதத்தில் மட்டும் 1.3 கோடி பேருக்கு வேலை போய்விட்டது. பொது மக்களின் பிரச்சனைக்காக நாங்கள் குரல் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது. அரசு பதில் சொல்லியே தீர வேண்டும். பிரதமரே, விவாதங்களையும், கேள்விகளை தவிர்ப்பதும் தான் பாராளுமன்ற விவாதமுறைக்கு எதிரானது என பதிவிட்டுள்ளார்.
அமெரிக்கா : அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை நிறைவடைந்தது.…
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இந்திய நேரப்படி இன்று காலை 6 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி…
சென்னை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது என…
சென்னை : தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…
சென்னை : ஏற்றமும், இறக்கமுமாக உள்ள தங்கம் விலை, இன்று சற்று உயர்ந்துள்ளது. தீபாவளி பாண்டியை முன்னிட்டு அதிர்ச்சியின் உச்சத்திற்கு…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று (நவம்பர் 5) மாலை தொடங்கி, இன்று அதிகாலை 6.30…