பெங்களூரில் பத்து வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் பாதிரியார் வெங்கடராமணப்பா கைது செய்யப்பட்டுள்ளார்.
வடகிழக்கு பெங்களூருவில் உள்ள தேவனஹள்ளி என்னும் பகுதியில் வசித்து வரக்கூடிய தனது மகளை பார்ப்பதற்காக நேற்று 62 வயது கோயில் பாதிரியார் ஒருவர் சென்றுள்ளார். அப்பொழுது அந்த தெருவில் வசித்து வரக்கூடிய தம்பதியர்களின் 10 வயது சிறுமி அவரது மகள் வீட்டண்டையில் விளையாடிக்கொண்டு இருந்துள்ளது. அந்த சிறுமியை பார்த்த பாதிரியார் அவளிடம் பேசி தனது மகள் வீட்டிற்குள் அழைத்து சென்றுள்ளார். அதன் பின் அந்த சிறுமியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
ஆனால், சிறுமியை காணவில்லை என அச்சிறுமியின் பெற்றோர் தேட ஆரம்பித்த போது பாதிரியார் தனது மகள் வீட்டிற்குள் சிறுமியை அழைத்து சென்றதாக தெருவோரத்தில் பூ விற்கும் ஒருவர் கூறியுள்ளார். உடனடியாக பெற்றோர் அங்கு செல்ல அச்சிறுமியும் அழுதுகொண்டு வெளியில் வந்துள்ளார். சிறுமி நடந்ததை சொல்லவே, இது குறித்து காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர், மேலும் அந்த பகுதியில் வாசிக்க கூடியவர்கள் பாதிரியார் இருந்த வீட்டின் முன்பு குவிந்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பாதிரியாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அருகிலிருந்த கடையிலுள்ள சிசிடிவி கேமராவிலும் அவர் சிறுமியை பேசி வீட்டிற்குள் அழைத்து சென்றுள்ளது பதிவாகியுள்ளது. தற்பொழுது சிறுமி பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.
சென்னை: விடைத்தாளில் ஒரு சில மாற்றங்களை செய்து அறிமுகப்படுத்தியுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. புதிய OMR விடைத்தாளின் மாதிரி பாடமானது www.tnpsc.gov.in…
சென்னை: பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது, மத்திய அரசு கொண்டு வந்த பல்கலைகழக நிதிநல்கைக் குழு தொடர்பான வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற…
டெல்லி : இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய அணியின் விக்கெட்…
சென்னை : பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 910 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய்…
கொல்கத்தா : ஆர்.ஜி.கர் என்கிற அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர் …
காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவர் விஜய் இன்று மேல்பொடவூரில் தனியார் மண்டப வளாகத்தில் பரந்தூர் விமான…