கேரளா மாநிலம் கோழிக்கோட் அருகே உள்ள இரணிபள்ளம் பகுதியை சார்ந்தவர் பிரேம்சந்திரன் ( 26) , சான்டிரா சந்தோஷ் (23). இவர்களுக்கு கடந்த 2018-ம் ஆண்டு மே 20-ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது.
ஆனால் மே மாதம் கேரளாவில் பரவிய நிபா வைரஸால் 17 பேர் பலியாகினர். இதனால் நிபா வைரஸ் குறைந்தபின் திருமணம் நடத்தி விடலாம் என நினைத்தனர்.எதிர்பாராதவிதமாக மணமகனின் உறவினர் ஒருவர் இறந்த நிலையில் திருமணம் ஒரு வருடத்திற்கு தள்ளி போனது.
பின்னர் கடந்த ஆண்டு ஓணம் பண்டிகையை ஒட்டி திருமணம் நடத்த இருந்தனர்.ஆனால் பெருவெள்ளம் ஏற்பட்டு 2-வது முறையாக திருமணம் ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டு முறை திருமணம் நின்றதால் இந்த மார்ச் மாதம் திருமணம் நடத்த உறவினர்கள் முடிவு செய்தனர்.
இதற்காக மண்டபம் ,2 ஆயிரம் பத்திரிகைகள் அச்சடிக்கப்பட்டு உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் கொடுத்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் ஒன்றாக கூடுவதற்கு அரசு தடை விதித்தது.
இதனால்3-வது முறையாக திருமணம் ஒத்தி வைக்கப்பட்டது. வரும் செப்டம்பர் மாதம் திருமணம் நடத்த உள்ளதாக உறவினர்கள் கூறி உள்ளனர்.கேரளாவில் கொரோனாவால் 40-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்து காணப்படுகிறது. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்திருக்கிறது.…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றயை நிகழ்வுகளில் பங்கேற்க வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், 'இவன்தான் அந்த சார்' என அண்ணா…
சென்னை: விஜயின் தமிழக வெற்றிக்கழக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் சென்னை பனையூர் அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில்…
சென்னை: பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சில கருத்துகளை தெரிவித்து இருந்தார். இது தற்போது அரசியல்…
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனுக்கு அணியில் விளையாட வாய்ப்புகள் சரியாக வழங்கப்படாதது ஒரு பெரிய கேள்விக்குறியான…
சென்னை : 2025ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கி நடந்து வருகிறது. இன்று 5-ஆம்…