Categories: இந்தியா

நள்ளிரவு முதல்  ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் அமலானது குடியரசுத் தலைவர் ஆட்சி…!

Published by
Venu

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் நள்ளிரவு முதல்  குடியரசுத்தலைவரின் ஆட்சி அமலுக்கு வந்தது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 87 தொகுதிகள் கொண்ட ஜம்மு காஷ்மீர் மாநில சட்டப்பேரவைக்கு கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தல் நடந்தது.

இதில் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு 28 இடங்கும், பாஜகவுக்கு 25 இடங்களும், தேசிய மாநாட்டுக் கட்சிக்கு 15 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 12 இடங்களும், சுயேட்சைக்கு 7 இடங்களும் கிடைத்தன. 87 எம்எல்ஏ.க்கள் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 44 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
Image result for ராம்நாத் கோவிந்த் ஜம்மு காஷ்மீர்
இந்நிலையில் பலதரப்பட்ட பேச்சுக்குப்பின் பாஜக – மெஹ்பூபா தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி கூட்டணி ஆட்சிக்கு வந்தது.திடீரென பா.ஜ.க. தனது ஆதரவை விலக்கிக்கொண்டது. கொள்கை அளவில் வெவ்வேறு துருவங்களாக இருந்த இரு கட்சிகளும் 26 மாதங்கள் சேர்ந்து ஆட்சியில் இருந்ததே மிகப்பெரிய சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் மெகபூபா முப்தியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது.

இந்த கூட்டணிக்கு பரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய கூட்டணி வெளியில் இருந்து ஆதரவு அளிக்க முடிவு செய்தது. 3 கட்சி தலைவர்களும் ஆளுநரை சந்தித்து நவம்பர் 21 ஆம் தேதி ஆட்சியமைக்க உரிமை கோர முடிவு செய்யப்பட்து .நவம்பர் 21 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சியின் மெஹபூபா முப்தி காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் , ஆதரவுடன் ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநருக்கு கடிதம் அனுப்பினார்.பின் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார் பிடிபி கட்சி தலைவர் மெகபூபா முஃப்தி.

பின்னர் பிடிபி கட்சி தலைவர் மெகபூபா முஃப்தி ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியிருந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தை கலைத்து ஆளுநர் சத்யபால் மாலிக் உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் குடியரசுத்தலைவரின் ஆட்சி அமல் என்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு வெளியிட்டார்.ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி நேற்றுடன் முடிவடைந்த நிலையில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.நள்ளிரவு முதல்  குடியரசுத்தலைவரின் ஆட்சி அமலுக்கு வந்தது. அதேபோல் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து நிர்வாகப் பணிகளும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றது . இந்தப் பணிகள் அனைத்தையும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட ஆளுநர் இனி மேற்கொள்வார்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Venu

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

3 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

3 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

3 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

3 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

4 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

4 hours ago