ஜம்முகாஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனம் …!
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் குடியரசுத்தலைவரின் ஆட்சி அமல் என்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 87 தொகுதிகள் கொண்ட ஜம்மு காஷ்மீர் மாநில சட்டப்பேரவைக்கு கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தல் நடந்தது.
இதில் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு 28 இடங்கும், பாஜகவுக்கு 25 இடங்களும், தேசிய மாநாட்டுக் கட்சிக்கு 15 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 12 இடங்களும், சுயேட்சைக்கு 7 இடங்களும் கிடைத்தன. 87 எம்எல்ஏ.க்கள் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 44 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இந்நிலையில் பலதரப்பட்ட பேச்சுக்குப்பின் பாஜக – மெஹ்பூபா தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி கூட்டணி ஆட்சிக்கு வந்தது.திடீரென பா.ஜ.க. தனது ஆதரவை விலக்கிக்கொண்டது. கொள்கை அளவில் வெவ்வேறு துருவங்களாக இருந்த இரு கட்சிகளும் 26 மாதங்கள் சேர்ந்து ஆட்சியில் இருந்ததே மிகப்பெரிய சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் மெகபூபா முப்தியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது.
இந்த கூட்டணிக்கு பரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய கூட்டணி வெளியில் இருந்து ஆதரவு அளிக்க முடிவு செய்தது. 3 கட்சி தலைவர்களும் ஆளுநரை சந்தித்து நவம்பர் 21 ஆம் தேதி ஆட்சியமைக்க உரிமை கோர முடிவு செய்யப்பட்து .நவம்பர் 21 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சியின் மெஹபூபா முப்தி காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் , ஆதரவுடன் ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநருக்கு கடிதம் அனுப்பினார்.பின் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார் பிடிபி கட்சி தலைவர் மெகபூபா முஃப்தி.
பின்னர் பிடிபி கட்சி தலைவர் மெகபூபா முஃப்தி ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியிருந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தை கலைத்து ஆளுநர் சத்யபால் மாலிக் உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் குடியரசுத்தலைவரின் ஆட்சி அமல் என்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி இன்றுடன் முடிவடைந்த நிலையில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது