ஆட்சி அமைப்பதில் குழப்பம் ! மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்
மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக மற்றும் சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.ஆனால் அதற்கு பின்பு யார் ஆட்சி அமைப்பது சிக்கல் ஏற்பட்டது.இதனை தொடர்ந்து பாஜக மற்றும் சிவசேனா கட்சிகள் ஆட்சியமைக்க தீவிரம்காட்டி வந்தது.தொடர்ந்து குழப்பமே நீடித்து வந்தது.இந்த நிலையில் தான் அம்மாநில ஆளுநர் குடியரசு தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்தார்.
இந்த நிலையில் தற்போது மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. மேலும் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.