குடியரசு தலைவர் விருது : 2வது முறையாக இந்த விருதை பெற்ற சிறை அதிகாரி…!

Default Image

இரண்டாவது முறையாக குடியரசு தலைவர் விருதை பெற தேர்வாகியுள்ள கே.வி.தாமஸ்-க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

கேரள மாநிலம் திருச்சூர் எருமாப்பள்ளியை பள்ளியை சேர்ந்த கே.வி.தாமஸ், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் கிளை சிறையில், கிளைசிறை சிறப்பு கண்காணிப்பாளராக பணியாற்றி  வருகிறார். 1990-ம் ஆண்டு சிறைப்பணியில் சேர்ந்த இவர் 30 ஆண்டுகளாக வருகிறார்.

இவர் சிறைப்பணியில் நன்னடத்தைக்காக 23-க்கும் அதிகமான விருதுகளை பெற்றுள்ளார். இவரது நற்குணங்களை அடிப்படையாக கொண்டு, 2015-ம் ஆண்டு குடியரசு தலைவர் விருது கிடைத்தது. இந்நிலையில், இரண்டாவது முறையாக குடியரசு தலைவர் விருதை பெற தேர்வாகியுள்ளார். இதனையடுத்து, இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்