தமிழக காவல் அதிகாரிகள் 23 பேருக்கு குடியரசுத்தலைவர் விருது.. மத்திய அரசு அறிவிப்பு!
சுதந்திர தின விழாவை முன்னிட்டு, காவல்துறை விருது பெறுவோரின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டது. அதில் தமிழகத்தை சேர்ந்த 23 பேருக்கு குடியரசுத்தலைவர் விருது வழங்கப்படவுள்ளது.
இந்தியாவில் 74 -வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பவுள்ள நிலையில், காவல்துறையினருக்கு குடியரசு தலைவர் விருத்திற்கான 631 காவலர்களின் பெயர் அடங்கிய பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இதில் தமிழக காவல் அதிகாரிகள் 23 பேருக்கு விருது வழங்கவுள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட பட்டியலின் மூலம் தெரியவந்தது. அதில், சிறப்பாக பணியாற்றிய தமிழகத்தை சேர்ந்த 2 காவல் அதிகாரிகளுக்கு குடியரசு தலைவரின் விருது வழங்கப்படவுள்ளது.
அதில், சென்னை ஆவடி பட்டாலியன் – 2 கமாண்டென்ட் அந்தோணி ஜான்சன் ஜெயபாலுக்கும், போச்சம்பள்ளி பட்டாலியன் – 7 கமாண்டென்ட் ரவிச்சந்திரனுக்கு குடியரசு தலைவரின் விருது வழங்கப்படவுள்ளது.