நாட்டின் குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்த் அவர்களின் பதவிக் காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.இதனால், குடியரசுத் தலைவர் தேர்தல் வருகின்ற ஜூலை 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.அதன் முடிவுகள் ஜூலை 21-ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.
இதனை முன்னிட்டு,கடந்த சில தினங்களுக்கு முன்னர் டெல்லியில் என்சிபி தலைவர் சரத் பவார் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா நிறுத்த ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது.இதனால்,குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக,திரிணாமுல் காங்கிரஸ் துணைத் தலைவர் பதவியில் இருந்து யஷ்வந்த் சின்கா ராஜினாமா செய்திருந்தார்.
இந்நிலையில்,எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா இன்று(ஜூன் 27-ஆம் தேதி) டெல்லியில் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார். இந்த நிகழ்வில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி,தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்,மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும்,தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர் ராவ் தலைமையிலான ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சி,எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை ஆதரிக்க முடிவு செய்துள்ளது.இதற்கிடையில், எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந் சின்காவுக்கு ‘Z’ பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது.
அதே சமயம்,குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு பாஜக சார்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு,குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுவை இரு தினங்களுக்கு முன்னர் பிரதமர் மோடி,பாஜக தேசிய தலைவர் ஜெபி நட்டா,மத்திய அமைச்சர்கள்,பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் முன்னிலையில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…