இந்தியாவின் 15 வது குடியரசு தலைவராக ராம்நாத் கோவிந்த் அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு பதவியேற்ற நிலையில்,அவரின் பதவிக்காலம் வருகின்ற ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.இதனால்,அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில்,குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.மேலும்,ஜூன் 29-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும் எனவும்,மனுக்களை திரும்பப் பெற ஜூலை 2 ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தலைமை தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.இதனையடுத்து,குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறும்.அதன்பின்னர், ஜூலை 21 ஆம் தேதிக்குள் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதற்கிடையில்,குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒருமித்த முடிவுடன் வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக ஆளும் பாஜக திட்டமிட்டுள்ள நிலையில்,திமுக,காங்கிரஸ்,திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து இன்று டெல்லியில் முக்கிய ஆலோசனையில் ஈடுபடவுள்ளன.
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…