#JustNow: குடியரசு தலைவர் தேர்தல் – இன்று காலை 10 மணி முதல் வாக்குப்பதிவு!

Default Image

இந்திய குடியரசு தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

நாட்டின் தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதி நிறைவடைகிறது. இதன் காரணமாக இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் வெளியிட்டிருந்தது. அதன்படி, நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது. இந்திய குடியரசு தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

குடியரசு தலைவருக்கான தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு, எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகின்றனர். குடியரசு தலைவர் தேர்தலுக்காக நாடாளுமன்றம் மற்றும் அனைத்து மாநிலங்களின் சட்டப் பேரவைகளில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில், மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் 776 பேர், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 4,120 எம்எல்ஏக்கள் என மொத்தம் 4,896 பேர் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் தகுதியை பெற்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு எம்பி, எம்எல்ஏக்களுக்கு வாக்கு மதிப்பு உண்டு. அதன்படி, ஒரு எம்பியின் வாக்கு மதிப்பு 700-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எம்எல்ஏக்களை பொறுத்தவரை மாநிலத்தின் மக்கள் தொகை அடிப்படையில் அவர்களின் மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. இதில்,  அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஒரு எம்ஏல்ஏவின் வாக்கு மதிப்பு 208-ஆக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு எம்எல்ஏவின் வாக்கு மதிப்பு 175 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, குடியரசுத் தலைவர் தேர்தலில், முதலமைச்சர் ஸ்டாலின் காலை 10 மணி அளவில் வாக்களிக்க திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.  மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதும், தலைமை செயலகம் சென்று வாக்களிக்க உள்ளார் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்