குடியரசு தலைவர் தேர்தல் : இன்று வாக்கு எண்ணிக்கை..! வெற்றி வாகை சூட போவது யார்..?
குடியரசு தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.
நாட்டின் தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதி நிறைவடைகிறது. இதன் காரணமாக இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் வெளியிட்டிருந்தது. அதன்படி, நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 18-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது.
தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு, எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டியிட்டனர். இந்த நிலையில், இன்று இந்த வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற மொத்த வாக்குபதிவில், 50%-க்கும் அதிகமான வாக்குகளை பெற வேண்டும். குடியரசு தலைவர் தேர்தலில் ஒட்டுமொத்த வாக்கு மதிப்பு 10,86,431 ஆகும்.