குடியரசு தலைவர் தேர்தல் – வாக்களித்தார் பிரதமர் மோடி…!
குடியரசு தலைவர் தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.
நாட்டின் தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதி நிறைவடைகிறது. இதன் காரணமாக இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் வெளியிட்டிருந்தது. அதன்படி, நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது.
தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு, எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகின்றனர். குடியரசு தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகம் முள்பட நாடு முழுவதும் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகம் சட்டப்பேரவையில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.