பன்னீர்செல்வம் உடன் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு சந்திப்பு..!

Default Image

டெல்லியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் உடன் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு சந்தித்து, குடியசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க ஓபிஎஸ்-ஐ சந்தித்து ஆதரவு கோரினார். 

இந்தியாவின் 15 வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு பதவியேற்ற நிலையில்,அவரின் பதவிக்காலம் வருகின்ற ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.இதனால்,அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறுவுள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தலை முன்னிட்டு பாஜக சார்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். இன்று பிரதமர் மோடி, தேசிய தலைவர் ஜெபி நட்டா, மத்திய அமைச்சர்கள், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் முன்னிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், டெல்லியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் உடன் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு சந்தித்து, குடியசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க ஓபிஎஸ்-ஐ சந்தித்து ஆதரவு கோரினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்