பஞ்சாபில் ஜனாதிபதி ஆட்சி.? முதலமைச்சருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் எச்சரிக்கை.!
பஞ்சாபில் குடியரசு தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்ய நேரிடும் என்று அம்மாநில முதல்வருக்கு ளுநர் பன்வாரிலால் புரோகித் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான்-க்கு, அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் எழுதிய கடிதத்தில், தான் எழுதிய கடிதங்களுக்கு பஞ்சாப் முதல்வர் பதில் அளிக்க வேண்டும் என்றும் அப்படி பதில் தராவிடில் குடியரசு தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்வேன் என எச்சரித்துள்ளார்.
பதிலளிக்காததன் மூலம் அரசமைப்பு சட்ட நடைமுறை சீர்குலைந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். இதற்கு முன் பல்வேறு கடிதங்கள் எழுதியும் பதில் வராததால் பஞ்சாப் ஆளுநர் அதிருப்தி அடைந்தார். மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு, மசோதாக்கள் தொடர்பாக விளக்கம் கேட்டு ஆளுநர் கடிதம் எழுதியிருந்ததார்.
இதற்கு அம்மாநில முதல்வர் பதில் கடிதம் அனுப்பவில்லை எனவும் கூறப்படுகிறது. எனவே, என் கடிதங்களுக்கு முறையாக பதில் அளிக்காவிடில் முதலமைச்சர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குடியரசு தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்வேன் எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.