இந்தியாவில் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்றார்.மேலும் மத்திய அமைச்சரவை குழுவும் பதவியேற்றது. அவர்களுக்கான துறைகளும் ஒதுக்கப்பட்டன.
இதனால் மக்களவைக்கு புதிதாக சபாநாயகரை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.கடந்த 17 -ஆம் தேதி மக்களவை கூடியது. இதனால் மக்களைவையின் இடைக்கால சபாநாயகராக பாஜக எம்பி வீரேந்திரகுமார் நியமனம் செய்யப்பட்டார். அதன்படி 17-வது மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லாவை நியமிக்கும் தீர்மானத்தை மக்களவையில் முன்மொழிந்தார் பிரதமர் மோடி.மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின்கட்கரி ஆகியோர் வழிமொழிந்தனர். ஓம் பிர்லாவை, அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமாரும் வழிமொழிந்தார்
பின் மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லாவை நியமிக்கும் தீர்மானத்தை மக்களவையில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு முன்மொழிந்தார்.இறுதியாக 17-வது மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் இன்று நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றி வருகிறார்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…