நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.அவரது உரையில், மக்களவைக்கு தேர்வாகியுள்ள புதிய உறுப்பினர்களை நான் மனதார வரவேற்கிறேன்.தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்த தேர்தல் ஆணையத்தை பாராட்டுகிறேன்.
ஒவ்வொரு குடிமகனின் வாழ்வை மேம்படுத்த வேண்டும் என்பதே அரசின் குறிக்கோள். கடந்த 5 ஆண்டுகளில் அரசின் செயல்பாடுகளில் மக்கள் திருப்தி பாதுகாப்பான இந்தியாவை கட்டமைப்பதில் அரசு உறுதியாக உள்ளது.
நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் வளர்ச்சி செல்ல வேண்டும் என்பதே இலக்கு. நடந்து முடிந்த தேர்தலில் பெண்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளனர் .எந்த வித குழப்பம் இல்லாமல் மக்கள் தெளிவாக தீர்ப்பளித்துள்ளனர்.
நகரங்களோடு கிராமங்களும் வளர்ச்சி பெற திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.புதிய இந்தியாவை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம்.ஒருங்கிணைந்த வளர்ச்சியை குறிக்கோளாக கொண்டு அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது.
தேர்தல் முடிவுகள் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது.பெண்கள் மற்றும் ஏழைகளின் முன்னேற்றத்திற்காக அரசு செயல்படுகிறது. வறட்சி பாதித்த பகுதிகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது சாதி, பேதமற்ற புதிய இந்தியாவை உருவாக்குவதே இலக்கு ஆகும்.
ஜல்சக்தி அமைச்சகத்தின் மூலம் தண்ணீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்.சிறு, குறு வணிக நிறுவனங்களுக்கு என சிறப்பு திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. வேளாண் வளர்ச்சிக்கு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும்.
விவசாயிகளுக்கான நலத்திட்ட உதவிகளை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது குடிநீர் தட்டுப்பாடு பெரும் கவலையாக மாறியுள்ளது. வறட்சி பாதித்த பகுதிகளை மீட்டெடுக்க சிறப்பு திட்டங்கள்.
வேளாண் துறையின் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.சுகாதாரத்துறையை மேம்படுத்த அரசு முழு முயற்சி மேற்கொண்டுள்ளது. மருந்து பொருட்களை மலிவான விலையில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வேளாண் துறையில் 25 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.பெண்களின் பாதுகாப்பிற்கு அதி முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. வங்கி சேவைகளை வீட்டு வாசலுக்கே கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.
பெண்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் . திறன் மேம்பாடு மற்றும் இளைஞர் நலனுக்கு அரசு முக்கியத்துவம் அளிக்கிறது.
தொழில்முனைவோர்களை ஊக்குவிக்க சிறப்பு திட்டங்கள் கொண்டுவரப்படும் .புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் அரசு தீவிரமாக உள்ளது.
பிரதமரின் முத்ரா யோஜனா மூலம் 19 கோடி பேருக்கு கடனுதவி .முத்ரா யோஜனா திட்டம் 30 கோடி பேருக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. உலக அளவில் உற்பத்தி மையமாக இந்தியா திகழ்கிறது.
பெண்களுக்கு சம உரிமை கிடைக்கும் வகையில் முத்தலாக் ஒழிப்பு அவசியம்.கிராம புற பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பு திட்டங்கள் பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள் என்று தனது உரையில் தெரிவித்துள்ளார்.
பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள் ஊழலை எந்த வடிவிலும் இந்த அரசு பொறுத்துக்கொள்ளாது – குடியரசு தலைவர்
சிறு தொழில் வளர்ச்சிக்கு ஜிஎஸ்டி பெரிய அளவில் உதவுகிறது கருப்பு பணத்திற்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது – குடியரசு தலைவர் தொழில் தொடங்க உகந்த நாடுகள் பட்டியல்: இந்தியா 77-வது இடத்திற்கு முன்னேற்றம்
வரி செலுத்துவது மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது – குடியரசு தலைவர் * வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு அரசு அதிக கவனம் செலுத்துகிறது – குடியரசு தலைவர் * ரியல் எஸ்டேட் துறையில் நடைபெற்று வந்த முறைகேடுகள் தடுக்கப்பட்டுள்ளன
இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நேற்று நடைபெற்ற நிலையில், ஆளுநர் கலந்துகொண்டு உரையாற்றுவார் என கூறப்பட்டது. ஆனால்,…
சென்னை : தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக உள்ள நயன்தரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த 2022ஆம்…
நியூ யார்க் : குல்தீப் குமார் எனும் 35 வயது மதிக்கத்தக்க நபர் அமெரிக்காவில் பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த…
டெல்லி : அடுத்த மாதம் (பிப்ரவரி) தலைநகர் டெல்லியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பரப்புரை வேலைகளை…
கர்நாடகா: சினாவில் பரவி வரும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சளி, இருமல், தொண்டை எரிச்சல்,…
சென்னை : சீனாவில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாதிக்கும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.…