நாளை இந்தியாவின் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஜம்மு-காஷ்மீர் செல்லவிருக்கிறார்.
குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நாளை ஜம்மு-காஷ்மீர் செல்லவிருக்கிறார். பாகிஸ்தான் நாட்டுடன் நடந்த கார்கில் போர் நினைவு தினம் ஜூலை 26 அன்று கார்கில் நினைவிடத்தில் நடக்க உள்ளது. அதனால் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை ஜம்மு-காஷ்மீர் செல்கிறார்.
கார்கில் போரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு 22 ஆவது கார்கில் போர் நினைவு தினமான ஜூலை 26 ஆம் தேதி கார்கில் நினைவிடத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று மரியாதை செலுத்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் செல்கிறார். மேலும், லடாக் பகுதியில் நடக்கவுள்ள நிகழ்ச்சிகளிலும் கலந்துக்கொள்ளவிருக்கிறார்.
ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் 19 ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளவுள்ளார். இதன் பின்னர் ஜூலை 27 ஆம் தேதி மாதா வைஷ்ணோ தேவி குகைக்கோவிலுக்கு சென்றுவிட்டு, அன்றே டெல்லிக்கு திரும்பவுள்ளார். குடியரசுத்தலைவர் வருகை தரவிருப்பதால் ஜம்மு-காஷ்மீர் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது என…
சென்னை : தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…
சென்னை : ஏற்றமும், இறக்கமுமாக உள்ள தங்கம் விலை, இன்று சற்று உயர்ந்துள்ளது. தீபாவளி பாண்டியை முன்னிட்டு அதிர்ச்சியின் உச்சத்திற்கு…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று (நவம்பர் 5) மாலை தொடங்கி, இன்று அதிகாலை 6.30…
சென்னை : பொதுவாகவே ஒரு இயக்குநர் ஒரு படத்தினை இயக்கிய பெரிய அளவில் ஹிட் கொடுத்துவிட்டார் என்றாலே அந்த இயக்குநர்…
தூத்துக்குடி : திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெற்று வரும் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை (நவ.7)…