குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 4 நாள் சுற்றுப்பயணமாக உத்தர பிரதேசம் செல்கிறார்…!
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை 4 நாள் சுற்றுப்பயணமாக உத்தர பிரதேசம் செல்கிறார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் நாளை 4 நாள் சுற்றுப்பயணமாக உத்தரபிரதேசம் செல்லவுள்ளார். ஜென்மாஸ்டமியை முன்னிட்டு வருகிற 29-ஆம் தேதி அயோத்தி ராமர் கோயிலில் குடியரசுத் தலைவர் வழிபாடு நடத்துகிறார். இவர் தான் இந்த கோவிலில் முதல் முறையாக சாமி தரிசனம் செய்யக் கூடிய முதல் குடியரசுத் தலைவர்.
அயோத்தியில் தற்போது பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரக்கூடிய ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகளையும் குடியரசுத் தலைவர் பார்வையிட்டு, பின் அயோத்தி ராம் கதா பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ராமாயண மேளாவை தொடங்கி வைக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
நான்கு நாட்கள் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் நடைபெறக்கூடிய பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தான் குடியரசுத் தலைவர் உத்திரபிரதேசம் செல்கிறார். மேலும், குடியரசுத் தலைவரின் வருகையை முன்னிட்டு அயோத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், இன்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பார்வையிட உள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.