ஆந்திராவில் விஷவாயுவால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல்
ஆந்திராவில் விஷவாயுவால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமாக பரவி வருகிறது.இதனால் நாடே முடங்கியுள்ளது .ஒரு புறம் கொரோன வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில் மறுபுறம் ஆந்திராவில் சோகமான நிகழ்வு ஓன்று அரங்கேறியுள்ளது.ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் எல்.ஜி. பாலிமர் இண்டஸ்ட்ரியல் தொழிற்சாலை இயங்கி வருகிறது.இன்று இந்த தொழிற்சாலையில் திடீரென்று விஷவாயு கசிவு ஏற்பட்டது.இதனால் அந்த தொழிற்சாலை அமைத்துள்ள பகுதிகளில் இருந்த மக்கள் மூச்சுத்திணறி கூட்டம் கூட்டமாக கீழே விழுந்தனர்.இதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துவிட்ட நிலையில் 2000-க்கும் மேற்பட்டோர் விஷவாயுவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் அந்த பகுதி மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி,காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் ஆந்திராவில் விஷவாயுவால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார் .விஷவாயுவால் பாதிக்கப்பட்டோர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.