கான்பூர் சென்றடைந்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் …!
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 2 நாள் சுற்றுப்பயணமாக உத்தர பிரதேசத்திற்கு சென்றடைந்துள்ளார்.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இன்றும், நாளையும் உத்தர பிரதேசம் செல்ல உள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்பொழுது குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் கான்பூர் விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார்.
அவரை உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் வரவேற்றுள்ளனர். சவுத்ரி ஹர்மோகன் சிங் யாதவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவில் குடியரசுத் தலைவர் கோவிந்த் கலந்து கொண்டு இன்று உரையாற்றுவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
Governor of Uttar Pradesh, Smt Anandiben Patel and Chief Minister, Yogi Adityanath receiving President Ram Nath Kovind on his arrival at Kanpur, Uttar Pradesh. pic.twitter.com/APsYQMRuJo
— President of India (@rashtrapatibhvn) November 24, 2021