இந்தியா முழுவதும் இன்று 71-வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஆளுநர்கள் தேசியக் கொடியேற்றி குடியரசு தின விழா அணிவகுப்பை பார்வையிட்டு முப்படையினர், காவல்துறையினரின் மரியாதையை ஏற்றுக் வருகின்றனர்.
இதைப்போல டெல்லியில் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றினார். இந்த விழாவில் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு ,பிரதமர் மோடி , பிரேசில் அதிபர் மெசியாஸ் , காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி , முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றிய பின்னர் 21 பீரங்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தியதை தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ராம் நாத் கோவிந்த் ஏற்று வருகிறார்.
டெல்லியில் நடைபெற்ற இந்த குடியரசு தின விழாவில் ஒரு லட்சத்த்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு குடியரசு தினத்தை கொண்டாடினர்.மேலும் குடியரசு தினத்தையொட்டி டெல்லி ராஜ்பாத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பது போடப்பட்டு உள்ளது.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…