வாஜ்பாயின் பிறந்த நாளையொட்டி குடியரசு தலைவர் , பிரதமர் மரியாதை
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 96-வது பிறந்த நாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்கள்.மேலும் மத்திய அமைச்சர்களான அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் ஆகியோரும் மரியாதை செலுத்தினார்கள்.
96 வது பிறந்த நாளை முன்னிட்டு நாடாளுமன்றத்தில் ‘அடல் பிஹாரி வாஜ்பாய் என்ற புத்தகத்தை வெளியிடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி.மக்களவை செயலகத்தால் வெளியிடப்பட உள்ள இந்த புத்தகம் வாஜ்பாயின் குறிப்பிடத்தக்க உரைகள், வாழ்க்கை மற்றும் படைப்புகளை மையமாகக் கொண்டுள்ளது.நாடாளுமன்றத்தின் மத்திய மண்டபத்தில் நடைபெறும் விழாவில் இந்த புத்தகம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. வாஜ்பாய் பிறந்த நாள் தினத்தை நல்லாட்சி தினமாக மத்திய அரசு கொண்டாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.