மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை!
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 152-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியல் பிரபலங்கள் பலரும் மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லியில் ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு குடியரசு தலைவர், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினை சேர்ந்தவர்களும் மகாத்மா காந்திக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.