பிரதமரின் நிவாரண நிதிக்கு, ஒரு மாத சம்பளத்தை வழங்கிய குடியரசுத் தலைவர்.!
இந்தியாவில் கொரோனா பரவலை அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் வைரஸ் பரவலைத் தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு (144 தடை) அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்தியா பல்வேறு விதமாக பொருளாதாரத்தில் இழப்பை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிகளுக்காக விருப்பம் உள்ளவர்கள் நிதியுதவி தரலாம் என கூறினார். இதையடுத்து பல அரசியல் காட்சிகள், திரைப்பட நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் என அவர்களால் முடிந்ததை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று கொரோனா தடுப்பு பணிக்காக டாடா குழுமம் சார்பில் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்தனர். இதையடுத்து இன்று கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்கு அதானி குழுமம் சார்பில் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.100 கோடி வழங்கப்படும் என அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி கூறியுள்ளார். மேலும் ஏற்கனவே திரைப்பட நடிகர் அக்ஷய குமார் ரூ.25 கோடி கொரோனா தடுப்பு பணிக்காக நிதி வழங்குவதாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது கொரோனா தொடர்பான பிரதமரின் நிவாரண நிதிக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒரு மாத ஊதியத்தை அளித்துள்ளார். மேலும் குடியரசு தலைவர் மாளிகை ஊழியர்களும் ஒரு மாத ஊதியத்தை வழங்க உள்ள நிலையில், மக்கள் பிரதமரின் கொரோன நிவாரண நிதிக்கு தாராளமாக உதவ முன்வர வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.
President Ram Nath Kovind pledges to donate one-month salary to PM-CARES Fund to help the nation tide over the crisis of COVID-19. He appeals to all fellow citizens to donate generously to PM-CARES Fund to help defeat COVID-19.
— President of India (@rashtrapatibhvn) March 29, 2020