டெல்லி ஜனாதிபதி மாளிகையில் உள்ள முகலாய தோட்டத்தை இன்று திறந்து வைக்கிறார் குடியரசு தலைவர்!
டெல்லி ஜனாதிபதி மாளிகையில் உள்ள முகலாய தோட்டத்தை இன்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கும் நிலையில், நாளை முதல் பொதுமக்கள் பார்வைக்காக இந்த தோட்டம் திறந்திருக்கும் என அறிவிப்பு.
டெல்லி ஜனாதிபதி மாளிகையில் உள்ள முகலாய தோட்டம் இன்று குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் அவர்களால் திறந்து வைக்கப்படவுள்ளது. நாளை முதல் இந்த தோட்டம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டிருக்குமாம். ஆனால், அதற்க்கு ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்திருப்பது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முகலாய தோட்டம் பிப்ரவரி 13 ஆம் தேதி முதல் மார்ச் 21 ஆம் தேதி வரை தான் பொது மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டிருக்குமாம், ஒவ்வொரு ஒரு மணிநேரத்துக்கும் 100 பேர் அனுமதிக்கப்படுவதுடன், பார்வையிட வரும் பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.