3 நாள் பயணமாக வங்காளதேசம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் செல்கிறார்.!
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 3 நாள் பயணமாக இன்று வங்கதேசம் செல்கிறார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று முதல் 17 வரை வங்கதேசத்துக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். டாக்காவில் நடைபெறும் வங்கதேச நாட்டின் 50-வது ஆண்டு தின நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் என்று வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா கூறினார்.
கடந்த 1971-ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடைபெற்ற போரில் டிசம்பர் 16-ஆம் தேதி பாகிஸ்தான் படைகள் இந்தியாவிடம் சரணடைந்தன. அந்தப் போரில் இந்தியா பெற்ற வெற்றியையடுத்து வங்கதேசம் தனிநாடாக உருவானது. நாளை பங்களாதேஷின் சுதந்திரத்தின் பொன்விழாவைக் கொண்டாடுகிறது. அதே நேரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே இராஜதந்திர உறவுகள் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடுகிறது.
குடியரசுத் தலைவருடன் கல்வித்துறை இணை அமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார் மற்றும் எம்பி ராஜ்தீப் ராய் ஆகியோர் செல்கின்றனர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா இது. இந்த பயணத்தின் போது ஜனாதிபதி பங்களாதேஷ் ஜனாதிபதியுடன் பிரதிநிதிகள் மட்ட சந்திப்புகளை நடத்துவார் என அவர் தெரிவித்தார்.
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் டாக்டர் ஏ.கே. அப்துல் மொமன் ஆகியோரும் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.