3 நாள் பயணமாக சுரினாமுக்கு வந்தடைந்தார் திரௌபதி முர்மு.!

President Murmu

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மூன்று நாள் பயணமாக சுரினாமுக்கு வந்தடைந்தார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் பதவியேற்ற பிறகு, தென் அமெரிக்க நாட்டுடனான இந்தியாவின் இருதரப்பு நட்புறவை மேம்படுத்துவதற்காக அவர் முதல் முறையாக சுரினாம் வந்துள்ளார். சுரினாமின் ஜனாதிபதி, முழு அரசு மரியாதையுடன் திரௌபதி முர்முவை விமான நிலையத்தில் வரவேற்றார்.

ஜனாதிபதி முர்மு தனது சுரினாம் பிரதிநிதி சந்திரிகாபெர்சாத் சந்தோகியுடன் இருதரப்பு பேச்சுக்களை நடத்த இருக்கிறார். தென் அமெரிக்க நாட்டிற்கு இந்தியர்கள் வருகையின் 150 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் கொண்டாட்டங்களில் தலைமை விருந்தினராக கலந்துகொள்வார்.

ஜனாதிபதி ஜூன் 6 வரை சுரினாமில் இருப்பாராம். அங்கு வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குச் சென்று இந்திய சமூகத்தின் உறுப்பினர்களுடன் உரையாடவுள்ளார். பின்னர், செர்பியாவின் ஜனாதிபதியான அலெக்ஸாண்டர் வுசிக்கின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி திரௌபதி முர்மு ஜூன் 7 ஆம் தேதி செர்பியாவிற்கு செல்கிறார்.

செர்பியாவில், ஜனாதிபதி முர்மு ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிக் உடன் இருதரப்பு சந்திப்பை நடத்துவார், மேலும் பிரதமர் அனா பிரனாபிக் மற்றும் தேசிய சட்டமன்றத்தின் சபாநாயகர் விளாடிமிர் ஓர்லிக் ஆகியோரை சந்திப்பார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்