குடியுரிமை சட்ட விவகாரத்தில் ஆதரவாக.. குடியரசு தலைவர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவில் தங்க பதக்கத்தை மறுத்த மாணவி..

Default Image
  • புதுச்சேரி  பல்கலைகழகத்தின் 27-வது பட்டமளிப்பு விழாவில் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்று  மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
  • தங்கப்பதக்கத்தை  மறுத்த மாணவியால் பரபரப்பு.
இந்த பட்டமளிப்பு விழாவில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி, பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத்சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  இதற்கு முன்னதாக இந்த பட்டமளிப்பு விழாவிற்கு வந்த சந்தேகப்படும் வகையில் இருந்த ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவியை பாதுகாப்பு அதிகாரிகள் வெளியே அழைத்து விசாரித்த பின்னர் அந்த மாணவர்களை  உள்ளே அனுமதித்தனர்.  மேலும், அந்த அரங்கத்தில் அமர்ந்திருந்த கேரளாவைச் சேர்ந்த மாணவி ரபிஹாவை என்ற பெண்ணை  அதிகாரிகள் அழைத்து விசாரணை செய்தனர். பின்னர், அவர் சி.ஏ.ஏ எதிர்ப்பு தெரிவிக்கக் கூடும் என்று கருதிய புதுச்சேரி காவல்துறை அதிகாரிகள் மாணவியை உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால், பல்கலைகழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த பெண்,  இப்பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பியல் துறையில் முதுநிலை பட்டத்தில் தங்க பதக்கம் வென்றவர் ஆவர். பின் குடியரசு தலைவர் புறப்பட்டு சென்ற பின்னரே அந்த மாணவியை கவல்துறையினரால்  உள்ளே அனுமதிக்கப்பட்டார்.குடியுரிமை திருத்த மசோதா மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக போராடும் ஒவ்வொருவருக்கும் ஆதரவளிக்கும் விதமாக இந்த பதக்கத்தை வாங்க மறுத்துள்ளதாகவும் அந்த மாணவி ரபிஹா தெரிவித்துள்ளார்.  இந்தநிலையில்,ராஷ்ட்ரபதி பவனிலிருந்து அளிக்கப்பட்ட விளக்கத்தில், மாணவி ரபிஹா வெளியேற்றப்பட்ட நிகழ்வுக்கும் குடியரசுத் தலைவர் அலுவலகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று  கூறபட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

LIve 2 - BJP - TVK
muthu (9) (1)
Natarajan - CSK
Kailash Gahlot
Seeman - DMK
edappadi - vijay
Ragging Death in Gujarat