குடியரசுத் தலைவர் ஐ.சி.யூ. பிரிவில் இருந்து சிறப்பு வார்டுக்கு மாற்றம்..!

இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு வார்டுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த வெள்ளிக்கிழமை உடல்நிலை குறைவு காரணமாக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேலும் சில பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக
அடுத்த மறுநாளே டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டார்.
இதைத்தொடர்ந்து இதயஅறுவை சிகிச்சை செய்துகொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அதன்படி, நேற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்திற்கு இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது எனவும் எய்ம்ஸ் மருத்துவமனையில் ஐ.சி.யூ. பிரிவில் இருந்து சிறப்பு வார்டுக்கு குடியரசுத் தலைவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025