2ஆம் சுற்று நிலவரம்.! தொடர்ந்து முன்னியிலையில் திரௌபதி முர்மு…
குடியரசு தேர்தல் நிலவரம் 2வது சுற்றுப்படி, பாஜக கூட்டணி ஆதரவு வேட்பாளர் திரௌபதி முர்மு முன்னிலை வகித்து வருகிறார்.
இந்தியாவின் 15வது குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்ப்பதற்கு அண்மையில் தேர்தல் நடைபெற்றது. இதில் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வாக்களித்து உள்ளனர்.
இதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் காலை முதலே பாஜக ஆதரவு வேட்பாளர் திரௌபதி முர்மு தான் முன்னிலையில் இருந்து வந்தார்.
தற்போது இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, திரௌபதி முர்மு 1000 வாக்குகள் மேல் பெற்று முன்னிலையில் இருக்கிறார். காங்கிரஸ் ஆதரவு வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா 500 வாக்குகளை தான் தாண்டியுள்ளார்.
ஏற்கனவே எதிர்பார்த்தை விட , திரௌபதி முர்முவுக்கு ஆதரவு பெருகி வருகிறது.