இன்று நடைபெற்று வரும் குடியரசு தலைவர் தேர்தல் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் பதவி காலம் இந்த மாதம் முடிவடைவதை தொடர்ந்து, புதிய 15வது குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று நடைபெறுகிறது.
இதில் ஆளும் பாஜக சார்பில் திரௌபதி முர்முவும் , காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறும்.
நடைபெறும் இந்த குடியரசு தலைவர் தேர்தல் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான தகவல்கள் இதோ…
1. மக்களைவை, மாநிலங்களவை, மாநில சட்டசபை உறுப்பினர்கள் என மொத்தம் 4,809 உறுப்பினர்கள் குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிப்பார்கள். 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்த தேர்தலில் 776 எம்பிக்கள் (மக்களவை மற்றும் மாநிலங்களவை) மற்றும் 4,033 எம்எல்ஏக்கள் (மாநில சட்டமன்ற உறுப்பினர்கள்) உள்ளனர்.
2. பாராளுமன்ற உறுப்பினர்கள் பச்சை நிற வாக்குச் சீட்டை கொண்டு வாக்களிப்பார்கள். எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க இளஞ்சிவப்பு நிற வாக்கு சீட்டு கொடுக்கப்பட்டு இருக்கும். இந்த முறை எம்.எல்.ஏ மற்றும் எம்.பி ஆகியோரின் வாக்கின் மதிப்பை கண்டறிய உதவுகின்றன.
3. ஒவ்வொரு மாநிலத்தின் மக்கள்தொகையின் படி வாக்குகள் கணக்கிடப்படுகின்றன. அதன்படி வாக்கின் மதிப்பு உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 208 ஆக இருக்கிறது. சிக்கிமில் 7 ஆக இருக்கும். அதாவது, உ.பி மாநிலத்தில் 208 × 403 = 83,824 வாக்குகளும், சிக்கிமின் 32 எம்.எல்.ஏக்கள் 32 × 7 = 224 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதன்படி, அனைத்து சட்டசபைகளிலும் பதிவான வாக்குகள் 5.43 லட்சம் ஆகும்.
4. 776 பாராளுமன்ற உறுப்பினர்கள் (லோக்சபாவில் 543, ராஜ்யசபாவில் 233) அவர்களின் வாக்கு மதிப்பு 700 ஆக கணக்கிடப்படுகிறது. அதன்படி மொத்தத் தேர்தல் குழுவின் எண்ணிக்கை 10.86 லட்சமாகிறது.
5. அரசியலமைப்பின் 62 வது பிரிவின்படி, குடியரசு தலைவரின் பதவிக்காலம் முடிவதற்கு முன்னரே அடுத்த குடியரசு தலைவருக்கான தேர்தல் நடத்தி புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…