நாட்டின் 75வது குடியரசு தினம்..! 80 ஆயுதப் படை வீரர்களுக்கு வீர தீர விருதுகளை வழங்கும் ஜனாதிபதி

இந்திய நாட்டின் 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு, 80 ஆயுதப் படை வீரர்களுக்கு கேலண்ட்ரி விருதுகளை வழங்குவதற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
வீர மரணமடைந்த 12 வீரர்களுக்கும் விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த விருதுகளில் 6 கீர்த்தி சக்ரா, 16 செளர்ய சக்ரா, 53 சேனா பதக்கங்களும் அடக்கமாகும்.

விருதுகள் அனைத்தும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் வழங்கப்படவுள்ளது.
அசோக சக்ரா விருதுக்கு பிறகு நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த கேலண்ட்ரி விருதான கீர்த்தி சக்ரா விருதை மேஜர் திக்விஜய் சிங் ராவத் உள்ளிட்டோருக்கு வழங்கப்படுகிறது. ஜம்மு மற்றும் காஷ்மீர் காவல்துறை அதிகாரிகளான மோகன் லால், அமித் ரெய்னா, ஃபரோஸ் அகமது தார் மற்றும் வருண் சிங் ஆகியோருக்கு சௌர்ய சக்ரா விருதுகள் வழங்கப்பட்டு கெளரவிக்கப்படுகிறது.

இதனிடையில் நாட்டின் 75வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஜனாதிபதி ஆற்றிய உரையில், “இந்திய ஜனநாயக அமைப்பு மேற்கத்திய ஜனநாயகத்தை விட மிகவும் பழமையானது. இது மாற்றத்திற்கான காலம், தேசம் அமிர்த காலத்தின் ஆரம்ப ஆண்டுகளில் உள்ளது.

பாஜக, RSSக்கு எதிராக இந்தியா கூட்டணி ஒன்றிணைந்து போராடும்.! ராகுல் காந்தி பேச்சு.!

ராமர் கோவில் மக்களின் நம்பிக்கை மட்டுமல்ல, நீதித்துறை செயல்பாட்டின் நம்பிக்கைக்கும் சான்று. மகளிர் இடஒதுக்கீடு மசோதா பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான ஒரு புரட்சிகர கருவியாகும். நாட்டை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல நமக்கு பொன்னான வாய்ப்புகள் உள்ளன” என்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்