70 வயதை கடந்த அனைவருக்கும் இலவச மருத்துவம்.. ஜனாதிபதி அறிவிப்பு.!
டெல்லி: 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கி 4வது நாளான இன்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். அப்போது, 3முறையாக பாஜக ஆட்சி அமைத்ததற்கும், நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆனதற்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
பின்னர் 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்தும் பாராட்டி பேசியிருந்தார். அப்போது மத்திய அரசால் நிறைவேற்றம் செய்யப்பட்டு வரும் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டம் பற்றி பேசினார்.
அதில், 70 வயதை கடந்த அனைத்து இந்திய குடிமக்களுக்கும் ஆயுஷ்மான் பாரத் சுகாதார காப்பீட்டு திட்டத்தில் இலவச மருத்துவ சிகிக்சை வழங்கப்படும். இந்த ஆயுஷ்மான் பாரத் பிரதம மந்திரி மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் இதுவரை 55 கோடி இந்திய மக்கள் பலனடைந்து உள்ளனர் என தெரிவித்தார்.
ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 5 லட்சம் வரையில் மருத்துவ காப்பீடு கிடைக்கும். இதன்மூலம் 12 கோடி குடும்பங்கள் பலனடைந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.